சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

Zurich நகரில் E-Scooter பயன்பாடு: புதிய கடுமையான விதிகள் அமுல்!

நிவேதினி•28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
Zurich நகரில் E-Scooter பயன்பாடு: புதிய கடுமையான விதிகள் அமுல்!

Zurich நகரில் E-Scooter பயன்பாடு: புதிய கடுமையான விதிகள் அமுல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தின் முன்னணி நகரான Zurich, E-Scooter அதீத பயன்பாட்டால் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய ஒழுங்குமுறை விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் முன்னணி நகரான Zurich, E-Scooter அதீத பயன்பாட்டால் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய ஒழுங்குமுறை விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.


நகரப் பகுதிகளில் E-Scooterகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவது மற்றும் நடைபாதைகளில் கண்மூடித்தனமாக ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவது சமீபகாலமாக அதிகரித்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் உள்ளூர் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.


E-Scooterகளை எக்காரணம் கொண்டும் பாதசாரிகள் நடக்கும் Footpaths களில் இயக்கக் கூடாது. சைக்கிள் பாதைகள் அல்லது இதற்கென ஒதுக்கப்பட்ட சாலைகளில் மட்டுமே பயணிக்க வேண்டும்.


இருக்கைகள் இல்லாத சாதாரண E-Scooteகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 20 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டு, கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது.


ரோட்டோரங்களில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் E-Scooteகளை கண்ட இடங்களில் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய குறிப்பிட்ட பார்க்கிங் இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


இந்த புதிய விதிகளை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது Zurich காவல் துறையினர் கடுமையான அபராத நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர்.


இந்த புதிய சட்டத் திருத்தங்கள் மூலம் Zurich நகரின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm