சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளம்: நாசா தகவல்!

சுமி•21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளம்: நாசா தகவல்!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளம்: நாசா தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் பாகம் ஒன்று நிலவில் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளத்தின் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தற்போது வெளியிட்டுள்ளது. விண்வெளி அறிவியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது,

எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் பாகம் ஒன்று நிலவில் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளத்தின் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தற்போது வெளியிட்டுள்ளது. விண்வெளி அறிவியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது,


கடந்த வருடம் ஜனவரியில் ஃபயர்ப்ளை ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிலவு லேண்டரைச் சுமந்து சென்று விண்ணில் பாய்ந்த ராக்கெட்டின் மேல் அடுக்கு Falcon 9 upper stage, விண்வெளியில் எரிபொருள் தீர்ந்து கட்டுப்பாட்டை இழந்து மிதந்து வந்தது.


கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சுமார் 4 டன் எடையுள்ள இந்த ராக்கெட் கழிவு பாகம் மணி நேரத்திற்கு சுமார் 5,400 மைல்கள் (தோராயமாக 8,700 கி.மீ) வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதியது.


நிலவில் மோதியதால் ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவின் LRO விண்கலம் சில நாட்களாகத் தீவிரமாக முயன்று, ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் துல்லியமான படங்களைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.


நாசாவின் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நிலவில் மோதிய இந்தத் தாக்கத்தால் 60 அடி (சுமார் 18 மீட்டர்) அகலமும், 10 அடிக்கும் குறைவான ஆழமும் கொண்ட புதிய பள்ளம் உருவாகியுள்ளது.


இந்த மோதலின் காரணமாக நிலவின் மேல்பரப்பில் உள்ள தூசிகள் மற்றும் பல மில்லியன் ஆண்டுகளாகக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பாறைத் துகள்கள் வெளியாகி, பள்ளத்தைச் சுற்றிலும் வெளிச்சமான மற்றும் இருண்ட நிறக் கோடுகளாகப் பரவியிருப்பதை நாசா புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.


விண்வெளிக் கழிவுகள் பூமியை மட்டுமல்லாமல், மற்ற கோள்கள் மற்றும் நிலவின் பரப்பையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதேசமயம், இந்த விண்கல மோதல் நிலவின் உட்பகுதி மற்றும் அமைப்பு குறித்த புதிய அறிவியல் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm