சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஷிராந்தி ராஜபக்சவுக்கு அவசர சத்திரசிகிச்சை!

VIGNESWARAN ABIRAMY•13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஷிராந்தி ராஜபக்சவுக்கு அவசர சத்திரசிகிச்சை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஷிராந்தி ராஜபக்சவுக்கு அவசர சத்திரசிகிச்சை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

'சிரிலிய சவிய' நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச திடீர் மாரடைப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சத்திரிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) விசாரணைக்கு வந்தபோதே இந்தத் தகவல் வெளியானது.

நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை: உடல்நலக் குறைவு காரணமாக ஷிராந்தி ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவர் நேற்று (12) சிறைச்சாலையில் இருந்தபோது திடீர் மாரடைப்புக்குள்ளானதாகவும், தற்போது தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை பிரிவில் திறந்த இதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வாதிடுகையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், சத்திரசிகிச்சை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எგவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்றார்.

இதனையடுத்து, பகிரங்க நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து நீதிபதி கடுமையாக விசாரித்ததுடன், ஷிராந்தி ராஜபக்ச தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாரா என்பது குறித்த உண்மையான விபரங்களை உடனடியாக நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவ அறிக்கை கிடைக்கும் வரை வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm