கடும் வெப்ப அலை: சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு மகசூல் வரலாறு காணாத வீழ்ச்சி!

கடும் வெப்ப அலை: சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு மகசூல் வரலாறு காணாத வீழ்ச்சி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கடும் வெப்ப அலையால் சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு மகசூல் வரலாறு காணாத வீழ்ச்சி.
சுவிட்சர்லாந்து நாட்டில் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிலவிய கடுமையான வெப்ப அலை காரணமாக, உருளைக்கிழங்கு மகசூல் மிகக் மோசமான அளவை எட்டியுள்ளது. அந்நாட்டில் தரவுகள் பதிவு செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து, இந்த அளவுக்குக் குறைந்த அளவு உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டது இதுவே முதல் முறை என அந்நாட்டு வேளாண் அமைப்பான Swisspatat தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சுவிஸ் விவசாயிகள் வெறும் 3,33,000 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கை மட்டுமே அறுவடை செய்துள்ளனர். இது கடந்த ஆறு ஆண்டுகளின் சராசரி உற்பத்தியை விட 20 சதவீதம் குறைவாகும். உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், பற்றாக்குறையை ஈடுசெய்யவும் சுமார் 1,30,000 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!
சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




