
பிரபல சமையல் கலைஞர் பத்மஸ்ரீ செஃப் தாமு மறைவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியச் சமையல் உலகிலும், சின்னத்திரையிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, தனது 72வது வயதில் இன்று காலை காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 ஆண்டுகளுக்கும் மேலான சமையல் கலை அனுபவம் கொண்ட செஃப் தாமு, சமையல் துறையில் கின்னஸ் சாதனை படைத்ததுடன், ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றவர்.
விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று, தனது அன்பான நடத்தையாலும் நகைச்சுவையான பேச்சினாலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார்.
இவரது கலைச் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 2025ஆம் ஆண்டு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது.
செஃப் தாமுவின் மறைவுக்கு திரையுலகச் பிரபலங்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




