மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் பிந்தைய மேலதிக சோதனைகள் இலவசமாக்கப்படலாம்!

மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் பிந்தைய மேலதிக சோதனைகள் இலவசமாக்கப்படலாம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்தில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆரம்பகட்டப் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டால், அதனை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக்குவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேலதிக ஆலோசனைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக நோயாளிகள் மருத்துவக் காப்புறுதியின் வருடாந்திர Franchise மற்றும் சுயபங்களிப்புக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலையை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சோசலிசக் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜிட் க்ரோட்டாஸ் முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கியுள்ளது.
தற்போது, மாகாண ரீதியிலான மார்பகப் புற்றுநோய் ஆரம்பகட்டப் பரிசோதனைத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் மம்மோகிராம் பரிசோதனைக்கு Franchise விலக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சந்தேகத்திற்கிடமான முடிவுகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மேலதிக பரிசோதனைகளுக்கு நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தச் செலவுகள் காரணமாகப் பெண்கள் அவசியமான பரிசோதனைகளைத் தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ நேரிடலாம் என மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பிரேரணை தொடர்பில் அடுத்தகட்டமாக தேசிய நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கவுள்ளது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!
சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




