சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பாலியில் பிரம்மாண்ட செயற்கைப் பிரம்பு விநாயகர் சிலை நிறுவல்!

VIGNESWARAN ABIRAMY•22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பாலியில் பிரம்மாண்ட செயற்கைப் பிரம்பு விநாயகர் சிலை நிறுவல்!

பாலியில் பிரம்மாண்ட செயற்கைப் பிரம்பு விநாயகர் சிலை நிறுவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தோனேசியாவின் பாலி தீவில் பிரம்மாண்டமான செயற்கைப் பிரம்பால் விநாயகர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது தனது ஆன்மீக முக்கியத்துவத்தையும் தாண்டி, தனித்துவமான கைவினைத்திறனுக்காகக் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கலைப்படைப்பு  சுமார் 15.315 மீற்றர் அடி உயரம் கொண்டதாகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தும் வருகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசிய நாட்டில், வளமான இந்து பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற பாலி மாகாணத்தில், செயற்கைப் பிரம்பினால் பின்னப்பட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியப் பின்னல் கலை நுட்பத்தையும் நவீனப் பொருட்களையும் இணைத்து, 126 உள்ளூர் பாலினியக் கைவினைக் கலைஞர்கள் இணைந்து இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

இந்தச் சிலை, உலகின் மிக உயரமான தாங்கிப் பிடிக்கப்பட்ட செயற்கைப் பிரம்புச் சிலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 'அலாஸ் ஹரம் பாலி' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை, ஞானம், வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளான விநாயகரைச் சித்தரிக்கிறது.

இது புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான பாலியின் புதிய அடையாளமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm