கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவுடனான தனது குறிப்பிடத்தக்க 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என Cricinfo செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம், தனது தலைமுறையின் மிகவும் அபாயகரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மேக்ஸ்வெல், பிரமிக்க வைக்கும் அதிரடி ஆட்டம், போட்டிகளை வென்று தரும் செயல்திறன் மற்றும் கிட்டத்தட்ட தனி ஒருவராகவே ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பெரும் பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.
38 வயதான இவர், அவுஸ்திரேலிய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதில் 7 டெஸ்ட் போட்டிகள், 149 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 130 டி20 சர்வதேசப் போட்டிகள் அடங்கும்.
இவர் ஒருநாள் போட்டிகளில் 3,990 ஓட்டங்களையும், டி20 போட்டிகளில் 2,897 ஓட்டங்களயைும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 339 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், அவுஸ்திரேலியாவின் ‘white-ball’ அணிகளில் ஒரு சிறந்த சகலதுறை வீரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




