சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!

VIGNESWARAN ABIRAMY•29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!

நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.

அரச பல்கலைக்கழகங்களின் கல்விச் சூழல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பது குறித்துப் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிப்புறக்கணிப்புடன் இணைந்து நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் பேரணிகளையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், உயர்கல்வித்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என விரிவுரையாளர்கள் தரப்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm