சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் இன்று மாத்திரம் பிற்போடப்பட்டுள்ளன

VIGNESWARAN ABIRAMY•20 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் இன்று மாத்திரம் பிற்போடப்பட்டுள்ளன

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் இன்று மாத்திரம் பிற்போடப்பட்டுள்ளன குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, நாளை 20ஆம் திகதி அனைத்து மாகாணங்களிலும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் மாத்திரம், தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், நவம்பர் 21ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஏனைய நேர்முகத் தேர்வுகள், முன்னர் திட்டமிடப்பட்டபடியே நடைபெறும் என அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய திகதிகள் மாகாண அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதியும், வடக்கு, தென், கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 29ஆம் திகதியும், மத்திய மாகாணத்திற்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் முதலாம் திகதியும் நடத்தப்படும்.

இதேவேளை, பாடசாலைகளுக்கான விருப்பத் தெரிவை உள்ளிடுவதற்காகக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் முறைமை, நேற்றுடன் காலாவதியாகவில்லை எனவும், விண்ணப்பதாரர்கள் தாம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நாளின் இரவு 8 மணி வரை அதில் தகவல்களை உள்ளிட முடியும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், நேர்முகத் தேர்வு தினம் வரையிலும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி இணையதளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் தமது பெயர் அடங்கிய பக்கத்தின் பிரதி மற்றும் அடையாள ஆவணங்களுடன், நேர்முகத் தேர்வு நடைபெறும் வளாகத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு அன்றைய தினம் காலையில் வருகை தர வேண்டும்.

அங்கு காலை 8 மணி முதல் ஒன்லைன் முறைமையில் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படுவதுடன், தேர்வுகளில் பங்கேற்ற பின்னர் அன்றைய தினம் இரவு 8 மணி வரை பாடசாலை விருப்பத் தெரிவு ஆவணங்களைப் பிரதி எடுத்துக் கையளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த திடீர் மாற்றங்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குக் கல்வி அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm