சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நாட்டின் பல மாகாணங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை: 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு!

VIGNESWARAN ABIRAMY•20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாட்டின் பல மாகாணங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை: 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு!

நாட்டின் பல மாகாணங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை: 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதாகவும், சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி, நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பொழியக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.


அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டல்கள்:


மின்னல் ஆபத்து: இடிமின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகளிலோ அல்லது உயரமான மரங்களின் கீழோ நிற்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மின் சாதனங்கள்: மின்னல் தாக்கம் அதிகரிக்கும் போது மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ந்து, அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


திடீர் வெள்ளம் & மண்சரிவு: தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களும், மலைப்பாங்கான மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களும் நிலவும் வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.


அவசர அனர்த்த உதவி மற்றும் தகவல்களுக்குப் பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு பிரதீப் கொடிப்பிலி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm