பிள்ளைகளின் எதிர்காலம் காக்க உதவுங்கள்: இந்தோனேசிய இலங்கை அகதிகள் உலகத் தமிழர்களிடம் கோரிக்கை!

பிள்ளைகளின் எதிர்காலம் காக்க உதவுங்கள்: இந்தோனேசிய இலங்கை அகதிகள் உலகத் தமிழர்களிடம் கோரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியாவில் தவித்து வரும் இலங்கை அகதிகள், தம்மை மீட்டு நிரந்தரத் தீர்வு பெற்றுத் தருமாறு உலகத் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறிய 75 குடும்பங்கள் மற்றும் 38 தனிநபர்கள் உட்பட மொத்தம் 345 இலங்கை ஏதிலிகள், தற்போது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்திலுள்ள மேடன் (Medan) பகுதியில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் திகதி இவர்களைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய (UNHCR) அதிகாரிகள், இனிமேல் மூன்றாம் நாடொன்றில் மீள்குடியேற்றம் செய்வதற்கான மாற்று வழிகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கும் விரக்திக்கும் உள்ளாகியுள்ள இந்த மக்கள், தம்மையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க உதவுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் உலகவாழ் தமிழ் மக்களிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




