மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம்: முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம்: முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் குழந்தைப் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் 22 கேரட் தூய தங்கம் கொண்ட 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும்.
பச்சிளங் குழந்தைகளின் மென்மையான சருமத்தைக் காயப்படுத்தாத வகையில், வட்டமான விளிம்புகளுடன் சிறப்புத் தொழில்நுட்பத்தில் தயாரித்துத் தாயாரிடம் ஒப்படைக்கப்படும்.
தமிழ்நாட்டை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டு, தாய்-சேய் நல அடையாள எண் (RCH ID) பெற்ற தாய்மார்கள் அனைவரும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவர்.
இன்றைய தொடக்க விழாவைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மதுரை பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்யவுள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




