
ஹொலிவூட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தனது 86 ஆவது வயதில் காலமானார் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகரும், ‘ஸ்டார் ட்ரெக்’ மற்றும் ‘எக்ஸ்-மென்’ திரைப்படங்கள் மூலமாக உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை வென்றவருமான சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தனது 86 ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில், அவரது மனைவியின் பராமரிப்பில் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அல்சைமர் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா நோய்களுக்கான சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்டார் ட்ரெக்’ தொடரில் கப்டன் ஜீன்-லூக் பிகார்ட் கதாபாத்திரமாகவும், ‘எக்ஸ்-மென்’ திரைப்படங்களில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரமாகவும் நடித்து புகழின் உச்சத்தைத் தொட்ட பெட்ரிக் ஸ்டீவர்ட்டின் மறைவு, ஹொலிவூட் திரை உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




