
ஹோமாகம சம்பவம்: OIC உள்ளிட்ட மூவருக்கு ஆணைக்குழு அழைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஹோமாகம பொலிஸ் தடுப்புக் காவலில் 29 வயதான இஷார ஹர்ஷ குமார என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மற்றும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அழைப்பாணை விடுத்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




