
ஐசிசி ஒருநாள் தரவரிசை: 5-வது இடத்திற்குச் சரிந்தார் ரோகித் சர்மா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சமீபத்தில் நிறைவடைந்த நியூசிலாந்து அணிக்க எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் பெரிதும் பேசப்பட்டது.
அந்தத் தொடரில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்கத் தவறியதன் தாக்கம், தற்போது ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலித்துள்ளது.இதன் காரணமாக, பேட்டிங்கிற்கான ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருந்த ரோகித் சர்மா, தற்போது ஒரு இடம் சரிந்து ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவருக்கு 732 மதிப்பீட்டுப் புள்ளிகள் கிடைத்துள்ளன. இதேவேளை, ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் இப்ராஹிம் சத்ரன் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்றாவது இடத்தைத்தையும் தக்கவைத்துள்ளார்.
நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட இந்தச் சறுக்கல் ரோகித் சர்மாவுக்கு தற்காலிக பின்னடைவாக அமைந்தாலும், விரைவில் அவர் தனது அக்மார்க் அதிரடி ஆட்டத்திற்குத் திரும்புவார் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




