சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சட்டவிரோத மீன்பிடி: 59 பேர் கைது; 23 படகுகள் கடற்படையினரால் பறிமுதல்!

VIGNESWARAN ABIRAMY•2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சட்டவிரோத மீன்பிடி: 59 பேர் கைது; 23 படகுகள் கடற்படையினரால் பறிமுதல்!

சட்டவிரோத மீன்பிடி: 59 பேர் கைது; 23 படகுகள் கடற்படையினரால் பறிமுதல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுழற்சி ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த 23 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி கடல் வளங்களைச் சூறையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளுக்குட்பட்ட திருகோணமலை, வாகரை, மூதூர், உப்பவெளி, கிரீன்பே, கதிரவெளி, பிளாக் ஸ்டாஃப், பவுல் பொயிண்ட், கிண்ணியா, நிலாவெளி, கும்புறுப்பிட்டி, வெருகல், பால்சேனை, புதுமாத்தளன், சாதுகுளம், யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கோவிலன், மன்னார் தாவுல்பாடு மற்றும் சவுத்பார் ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் இந்தச் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட 23 டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 59 சந்தேகநபர்களும் அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கைகளுக்காக வாகரை, கொட்பே, முல்லைத்தீவு, மூதூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm