சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மெக்காவில் 'ஒழுக்கக்கேடான செயல்': வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்!

VIGNESWARAN ABIRAMY•20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மெக்காவில் 'ஒழுக்கக்கேடான செயல்': வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்!

மெக்காவில் 'ஒழுக்கக்கேடான செயல்': வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மெக்கா நகரில் உள்ள புனித பள்ளிவாசலில் ஒழுக்கக்கேடான மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

நஸ்ருல் இஸ்லாம் மற்றும் சிட்டி அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர்களுக்கான மரண தண்டனை சவுதி அரச உத்தரவுக்கு அமைய நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் இவர்கள் முத்தம் கொடுத்ததாகக் செய்திகள் பரவினாலும், சவுதி அதிகாரிகள் குற்றச்சாட்டின் துல்லியமான விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.  

அதேநேரம், இந்தத் தண்டனை நிறைவேற்றம் குறித்து தங்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என ஜெட்டாவிலுள்ள வங்கதேச தூதரகம் கவலை தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் சவுதி வெளியுறவு அமைச்சிடம் விளக்கமளிக்குமாறு கோரியுள்ளது.  

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm