
அநுராதபுரத்தில் 3 தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள், இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் கடந்த 7ஆம் திகதி முதல் பௌத்த தேரர்கள் குழுவொன்றினால் சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த பின்னணியிலும் இப்போராட்டம் தொடர்ந்தது.
இதனிடையே, இன்றைய தினம் கொழும்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு கஸ்ஸப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இந்தச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




