சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி: பெருமிதம் கொள்கிறது இந்தியா!

VIGNESWARAN ABIRAMY•1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி: பெருமிதம் கொள்கிறது இந்தியா!

நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி: பெருமிதம் கொள்கிறது இந்தியா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

விமான கடத்தல் முயற்சியில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகளைத் துணிச்சலாகக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமிதம் கொள்கிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 180 பயணிகளுடன் சென்ற 'பிளை துபாய்' (Flydubai) பயணிகள் விமானத்தில் நடுவானில் அவசரநிலை ஏற்பட்டது. விமான கடத்தல் எச்சரிக்கை (Squawk 7500) விடுக்கப்பட்ட சூழலில், பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தச் ஆபத்தான தருணத்தில், மிகச் சாதுரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு பயணிகளின் உயிரைப் பாதுகாத்த இந்திய விமானி கேப்டன் மச்சாரின் வீரமிக்க செயலைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவரது இந்தச் செயல் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm