சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி!

சுமி•31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி!

GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

2,232 கிலோ எடையுள்ள இந்தச் செயற்கைக்கோளில் நவீன அணுக்கடிகாரங்களும், கூடுதலாக L1 சமிக்ஞை வசதியும் இடம்பெற்றுள்ளன. இதனால் செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்களில் நாவிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேம்படும்.

இதன் மூலம் செல்போன் வழிகாட்டுதல், வாகனப் போக்குவரத்து, விமான மற்றும் கப்பல் வழிகாட்டுதல், மீனவர்களின் பாதுகாப்பு, பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் ராணுவப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் பயன்பெறலாம்.

எனினும், அனைத்து செல்போன்களிலும் உடனடியாக இந்த வசதி கிடைக்காது. நாவிக் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சாதனங்கள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm