ஏமனில் தீவிரமடையும் மோதல்: ஏவுகணைத் தாக்குதலில் சவுதி போர் விமானம் முற்றாக அழிவு!

ஏமனில் தீவிரமடையும் மோதல்: ஏவுகணைத் தாக்குதலில் சவுதி போர் விமானம் முற்றாக அழிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஏமன் நாட்டின் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான அதிநவீன எஃப்-15 (F15) போர் விமானத்தை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஏமனில் சவுதி கூட்டமைப்புப் படைகளுக்கும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லையோர வான் பகுதியில் ரோந்து மற்றும் தாக்குதல் பணியில் ஈடுபட்டிருந்த சவுதியின் F15 போர் விமானத்தைக் இலக்கு வைத்து ஹவுதிக்கள் நிலத்திலிருந்து வான்நோக்கிப் பாயும் அதிநவீன ஏவுகணையை ஏவியுள்ளனர்.
ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் போர் விமானம் நொறுங்கி வி விழுந்து மண்ணோடு மண்ணாக அழிந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




