சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சர்வதேச மகளிர் வன்முறை ஒழிப்பு தினம்: செம்மஞ்சள் வண்ணத்தில் மிளிர்ந்த பாராளுமன்ற வளாகம்!

VIGNESWARAN ABIRAMY•25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சர்வதேச மகளிர் வன்முறை ஒழிப்பு தினம்: செம்மஞ்சள் வண்ணத்தில் மிளிர்ந்த பாராளுமன்ற வளாகம்!

சர்வதேச மகளிர் வன்முறை ஒழிப்பு தினம்: செம்மஞ்சள் வண்ணத்தில் மிளிர்ந்த பாராளுமன்ற வளாகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, இலங்கை பாராளுமன்ற வளாகம் இன்று செம்மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் எனப் பலரும் இன்று செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து சபை அமர்வுகளில் கலந்துகொண்டனர்.

"இது எனது உரிமை" (This is my right) என்ற தொனிப்பொருளின் கீழ், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm