சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சர்வதேச மனித கடத்தல் சந்தேகநபர் கைது: இந்திய தேசிய விசாரணை முகவரகத்திடம் ஒப்படைப்பு.

VIGNESWARAN ABIRAMY•16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சர்வதேச மனித கடத்தல் சந்தேகநபர் கைது: இந்திய தேசிய விசாரணை முகவரகத்திடம் ஒப்படைப்பு.

சர்வதேச மனித கடத்தல் சந்தேகநபர் கைது: இந்திய தேசிய விசாரணை முகவரகத்திடம் ஒப்படைப்பு. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கைக் குடிமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, இந்தியாவின் தேசிய விசாரணை முகவரகத்திடம் (NIA) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்டர்போல் சிவப்பு அறிக்கைக்கமைய இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், கடந்த 13ஆம் திகதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து NIA குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

சட்டப்பூர்வ கடவுச்சீட்டுகள் மூலம் கனடாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்து, இலங்கையர்களை முறைகேடாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் சதித்திட்டத்தில் இவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பெருமளவில் பணத்தைப் பெற்று, ஹவாலா முறையில் இந்தியாவிலுள்ள ஏனைய சந்தேகநபர்களுக்கு அனுப்பியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மங்களூரில் இலங்கையர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், ஏற்கனவே 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த முக்கிய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm