துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வச்சு குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வச்சு குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இன்று (செப்டம்பர் 9) காலை 7.50 மணியளவில் இலங்கை வந்தடைந்த விமானத்தில் இருந்து இறங்கியபோதே, தயாராக இருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைத் தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்றபோது துபாயில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் பல்வேறு கொலைகள், கப்பம் கோருதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர், போதைப்பொருள் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டிலும் தேடப்பட்டு வந்தார்.
கைது செய்யப்பட்ட கொண்ட ரஞ்சியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இலங்கையில் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை ஒடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் இந்த வீழ்ச்சி ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




