
LA Mayor Election 2026: தற்போதைய மேயரை விட முன்னிலையில் நித்யா ராமன்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், கருத்துக்கணிப்புகளில் கேரள வம்சாவளியைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கப் பெண்ணான நித்யா ராமன் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் தற்போதைய மேயர் கரேன் பாஸுக்கும் (Karen Bass) நித்யா ராமனுக்கும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் அரங்கேறின.
நகரின் வீடற்றோர் பிரச்சனை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால நிர்வாகத்தில் மேயர் கரேன் பாஸின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி நித்யா ராமன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த கரேன் பாஸ், நித்யா ராமனின் விமர்சனங்களை மறுத்துப் காரசாரமாகப் பதிலளித்தார்.
நித்யா ராமன் இத்தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்கும் முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




