சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மலைப்பாங்கான பகுதிகள், சரிவு நிலங்கள் மற்றும் முந்தைய காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீட்டரைக் கடந்துள்ள நிலையிலும், மழை தொடர்ந்து நீடித்து வருவதாலும் இந்த நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்தல், நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுதல் அல்லது கலங்கலாக நீர் வருதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இரவு நேரங்களில் பெய்யும் கனமழையின் போது மலைப்பாங்கான வீதிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கவனமாகப் பயணிக்க வேண்டும்.


நிலச்சரிவு அபாயம் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவசர காலங்களில் பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


வானிலை மீண்டும் சீரடையும் வரை பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm