
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை மற்றும் கனமழை காரணமாக, 8 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, மஞ்சள் நிற எச்சரிக்கை (Level 1) பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளாக:
காலி மாவட்டத்தின் தவலம; கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல; களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பேருவளை, மில்லனிய மற்றும் ஹொரணை; கண்டி மாவட்டத்தின் உடதும்பர, பஸ்பாகே கோரளை, உடபலாத்த மற்றும் உடுநுவர; கேகாலை மாவட்டத்தின் கேகாலை, மாவனெல்ல, தெரணியகல, வரகாப்பொல, அரநாயக்க, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை; குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல மற்றும் குருநாகல்; இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, அம்பர் நிற எச்சரிக்கை (Level 2) பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளாக:
களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட மற்றும் புலத்சிங்ஹல; கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் கலிகமுவ; நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை மற்றும் நோர்வூட்; இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல, எலபாத்த, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள், நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், ஊற்று நீர் திடீரென கலங்கலாக மாறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




