எரிவாயு விலை உயர்வு குறித்து விளக்கமளிக்க லாஃப்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு.

எரிவாயு விலை உயர்வு குறித்து விளக்கமளிக்க லாஃப்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு. குறித்த பிரத்யேக ஒளிப்படம்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அண்மையில் அதிகளவில் உயர்த்தியமை குறித்து விளக்கம் கோருவதற்காக, அந்நிறுவனத்தின் அதிகாரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைக்கு அழைத்துள்ளது.
இதன்படி, இன்று காலை 10 மணிக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முன்னிலையாகி, இந்த விலை அதிகரிப்புக்கான காரணங்களைத் தெளிவுபடுத்துமாறு லாஃப்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 13-ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப்ஸ் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் கணிசமாக உயர்த்தியது.
இதற்கமைய, 4,965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 6,740 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
அதேபோல், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாயால் உயர்த்தப்பட்டு, 2,720 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதிச் செலவுகள் உயர்ந்துள்ளமையாலேயே இந்த விலை திருத்தத்தை மேற்கொள்ள நேரிட்டதாக லாஃப்ஸ் நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், இந்தத் திடீர் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இது குறித்து அதிகாரசபை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




