வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கல்வி வலயப் பாடசாலைகளை பார்வையிட சென்றமை தொடர்பில் ஆசிரியர் சங்க உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் கடிதங்கள் அனுப்பப்படுவது தொடர்ந்தால், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அண்மையில் நெடுந்தீவுக்குச் சென்று, அங்கு கடமைப் புரியும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது தூரபிரதேசம் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆபத்துக்கான கூடுதல் சம்பளம் இடைநிறுத்தப்பட்டமை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகள் தவறியிருந்தமை கண்டறியப்பட்டது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




