சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

தமிழரின் பண்பாட்டையும் உரிமைகளையும் நிலைநிறுத்துவோம் – தமிழ்நாடு நாளில் முதலமைச்சர் விஜய் அழைப்பு!

VIGNESWARAN ABIRAMY•1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தமிழரின் பண்பாட்டையும் உரிமைகளையும் நிலைநிறுத்துவோம் – தமிழ்நாடு நாளில் முதலமைச்சர் விஜய் அழைப்பு!

தமிழரின் பண்பாட்டையும் உரிமைகளையும் நிலைநிறுத்துவோம் – தமிழ்நாடு நாளில் முதலமைச்சர் விஜய் அழைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் பேசும் பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாடு மாநிலம் உருவான தினமான நவம்பர் 1-ஆம் தேதியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் இந்த சிறப்பான நாளில் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மாநிலத்தின் தனித்துவமிக்க பெருமைகளையும் உரிமைகளையும் தொடர்ந்து நிலைநிறுத்த இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

தமிழ்நாடு உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில், மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினராலும் பொதுமக்களாலும் தமிழ் மொழி உணர்வு மற்றும் வரலாற்றுப் பெருமைகளை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm