சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

யாழ்ப்பாணத்திலும் அறிமுகமாகிறது 'மெட்ரோ' ஆடம்பரப் பேருந்துச் சேவை!

VIGNESWARAN ABIRAMY•11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
யாழ்ப்பாணத்திலும் அறிமுகமாகிறது 'மெட்ரோ' ஆடம்பரப் பேருந்துச் சேவை!

யாழ்ப்பாணத்திலும் அறிமுகமாகிறது 'மெட்ரோ' ஆடம்பரப் பேருந்துச் சேவை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் பொருத்தமான பாதைகளை அடையாளம் காணுதல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராயும் நோக்கத்துடன் விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கொழும்பில் தற்போது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வரும் இச்சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 2029 ஆம் ஆண்டு வரையிலான தேசிய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm