காணாமல் போன பதுளை வைத்தியர்: மஹியங்கனையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார்!

காணாமல் போன பதுளை வைத்தியர்: மஹியங்கனையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி காலை வழமை போல் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த விசேட வைத்தியர், அதன் பின்னர் திடீரென காணாமல் போயுள்ளார். அவரது வருகை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்,CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மீகஹகியுல பகுதியினூடாக மஹியங்கனை திசையை நோக்கி வைத்தியரின் கார் பயணிப்பது கண்டறியப்பட்டது.
தொடர் விசாரணைகளின் அடிப்படையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் மாப்பாகட வௌ பகுதிக்கு அருகில் 17ஆம் கட்டை பகுதியில் வைத்தியரின் சொகுசு கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
கைவிடப்பட்ட காரைக் கைப்பற்றிய பொலிஸார், காணாமல் போன வைத்தியரைத் தேடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வைத்தியரைக் கண்டறிவதற்காக பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கை அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




