கலப்படமா, சுத்தமானதா? உண்மையான பனீருக்கும் செயற்கை பனீருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கலப்படமா, சுத்தமானதா? உண்மையான பனீருக்கும் செயற்கை பனீருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சமீபகாலமாக சைவ உணவுப் பிரியர்களின் விருப்பமான உணவாக மாறியுள்ள பன்னீரில் , அதிக லாபத்திற்காக 'அனலாக் பன்னீர்' எனப்படும் செயற்கை பன்னீர் கலப்படம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பன்னீருக்கும் , ரசாயனங்கள் மற்றும் தாவர எண்ணெய்களால் உருவாக்கப்படும் செயற்கை பன்னீருக்கும் இடையிலான வேறுபாடுகளையும், அவற்றை வீட்டிலேயே எளிதாகக் கண்டறியும் முறை
உண்மையான பனீர் vs செயற்கை பன்னீர்: என்ன வித்தியாசம்?
மூலப்பொருட்கள்:
உண்மையான பனீர் முழுமையாகப் பசும்பால் அல்லது எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், செயற்கை பன்னீரில் பால் கொழுப்புக்குப் பதிலாக மலிவான பாமாயில், ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் , சோள மாவு , பால் பவுடர் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சத்துக்கள்:
சுத்தமான பன்னீரில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மாறாக, செயற்கை பன்னீரில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 'டிரான்ஸ் ஃபேட்' எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது இதய நோய்கள் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
வீட்டிலேயே கண்டறிவது எப்படி?
அழுத்திப் பார்த்தல்
உண்மையான பன்னீர் மிகவும் மென்மையாக இருக்கும்; விரலால் லேசாக அழுத்தினாலே உடையக்கூடிய தன்மை கொண்டது. ஆனால், செயற்கை பன்னீர் ரப்பர் போலச் சற்று கடினமாகவும், இழுவைத் தன்மையுடனும் இருக்கும்.
சுடுநீர் சோதனை
ஒரு சிறிய துண்டு பன்னீரை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். உண்மையான பனீராக இருந்தால் அது மென்மையாகி, லேசாக உதிரத் தொடங்கும். செயற்கை பன்னீராக இருந்தால், அதிலிருந்து எண்ணெய் மிதந்து வருவதோடு, அதன் வடிவம் மாறாமல் ரப்பர் போலவே இருக்கும்.
அயோடின் சோதனை
பன்னீரை தண்ணீரில் போட்டுச் சூடாக்கி, ஆறிய பிறகு அதில் சில துளிகள் 'அயோடின் டிஞ்சர்' ஊற்றவும். பனீரின் நிறம் நீலமாக மாறினால், அதில் மாவுச்சத்து கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். நிறம் மாறவில்லை என்றால் அது சுத்தமான பனீர்.
துவரம் பருப்புப் பொடி சோதனை
பனீரை நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின், அதில் சிறிதளவு துவரம் பருப்புப் பொடியைத் தூவி 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பன்னீர் வெளிர் சிவப்பு நிறமாக மாறினால், அதில் 'யூரியா' போன்ற ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம்.
வாசனை மற்றும் சுவை
உண்மையான பன்னீரில் இயற்கையான பாலின் நறுமணம் வீசும். சமைக்கும்போது மசாலாக்களை நன்கு உள்வாங்கிக் கொள்ளும். செயற்கை பனீரில் எண்ணெய் வாடை அல்லது செயற்கை வாசனை வீசுவதோடு, சமைத்த பிறகும் உள்ளே சுவையற்றதாக இருக்கும்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சளி, காய்ச்சலிலிருந்து தற்காக்க: மழைக்கால ஆரோக்கியக் குறிப்புகள்!
மழை மற்றும் குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சலிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் எளிய, பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறிப்புகள்:
நெற்றியில் கருமை, வெள்ளைத் திட்டுகளா? ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜிக்கு எளிய பராமரிப்பு குறிப்புகள்!
இன்று பலரும் எளிதாகப் பயன்படுத்தும் ஸ்டிக்கர் பொட்டுகளில் உள்ள பசை மற்றும் ரசாயனங்களால் சிலருக்கு நெற்றியில் அரிப்பு, சிவப்பு நிறம், கருமை அல்லது வெள்ளைத் திட்டுகள் போன்ற சரும அலர்ஜி ஏற்படலாம். இதற்கான முக்கியக் குறிப்புகள் இதோ
குறைந்த எண்ணெயில் நிறைந்த சத்து; சுவையான கோதுமை ரவை காய்கறிப் பணியாரம்!
குளிர்காலத்திற்கும், மாலை நேரச் சிற்றுண்டிக்கும் ஏற்ற சத்தான கோதுமை ரவை வெஜ் பணியாரம் மிக எளிதாகவும், குறைந்த எண்ணெயிலும் செய்யக்கூடிய அருமையான உணவாகும்.
உடலுக்குக் குளிர்ச்சி தரும் வாழைத்தண்டு பொரியல்: சுலபமான செய்முறை!
உடலுக்குக் குளிர்ச்சியும் பல ஆரோக்கிய நன்மைகளும் தரும் வாழைத்தண்டு பொரியலை மிகச் சுவையாகவும், எளிமையாகவும் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




