
இலங்கையில் மோசமான வானிலையால் 5,500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
தற்போதைய மழைக்கால வானிலை காரணமாக 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 1,594 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசமான வானிலை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், கனமழை காரணமாக 4 வீடுகள் முழுமையாகவும், 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுபுறம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலமையும் தொடர்ந்து வருகிறது. அதன்படி, 12 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




