
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸின் (Interpol) சிவப்பு அறிவித்தலுக்கு (Red Notice) அமைவாக டுபாயில் கைது செய்யப்பட்ட 34 வயதான அனோஷா லக்மாலி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்படி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘பெக்ஹோ சமன்’ (Backhoe Saman) என்பவரின் வழிகாட்டலுக்கு அமைய, கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் உணவகம் ஒன்றிற்கு உணவருந்த வருமாறு அழைத்தவர் இந்த சந்தேகநபர் என்பதும், அங்கு வந்தபோதே அவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் வைத்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக அவரை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




