இசைஞானி இளையராஜாவின் நீண்டகால இசைத் தோழர் சதானந்தம் உடல்நலக்குறைவால் காலமானார்!

இசைஞானி இளையராஜாவின் நீண்டகால இசைத் தோழர் சதானந்தம் உடல்நலக்குறைவால் காலமானார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழ் திரையுலகின் பொற்காலப் பாடல்கள் பலவற்றிற்குத் தனது தனித்துவமான கிதார் இசை மூலம் உயிர் கொடுத்த மூத்த கிதார் இசைக் கலைஞர் சதா என்கிற சதானந்தம் (79) சென்னையில் காலமானார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஆர். சுதர்சனத்தின் மகரான சதானந்தம், இளையராஜாவின் முதல் படமான 'அன்னக்கிளி' தொடங்கி பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு கிதார் வாசித்துத் தமிழ்த் திரிவுலகில் நீங்கா இடம் பிடித்தவர்.
பல மறக்க முடியாத பாடல்களின் இடையிசையிலும், தொடக்க இசையிலும் இவரது கிதார் வாசிப்பு ரசிகர்களைக் கவர்ந்த முக்கிய அம்சமாகும்.
இளையராஜாவின் இசைக்குழுவோடு பல தசாப்தங்களாகப் பயணித்ததுடன், வெளிநாட்டு மேடை இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து வந்த சதானந்தத்தின் மறைவு, திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்குத் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




