
32 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் 32 ஆவது வாரமாகவும் வலிசுமந்த உணர்வுகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் அடிப்படையாக விளங்கும் பூர்வீகக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், குறித்த காணிப் பகுதிகளில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், உல்லாசத்துறை சார்ந்த பயன்பாடுகள் இடம்பெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தல்செவன உல்லாச விடுதியை அண்மித்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இராணுவப் பங்களா என்ற போர்வையில் அமைந்துள்ள பகுதிகளைச் சூழவுள்ள நிலங்களிலும் விவசாயச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
மக்களின் காணிகள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டிய நிலையில், அவை இராணுவத்தின் விவசாயத் தேவைகளுக்கும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறான பயன்பாடுகளே காணி விடுவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




