சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய 'ரோமன்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

ஆகாஷ்•31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய 'ரோமன்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய 'ரோமன்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரபஞ்சத்தின் தோற்றம், இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பருப்பொருள் குறித்த ரகசியங்களை ஆராய்வதற்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,Nancy Grace Roman என்ற அதிநவீன விண்வெளித் தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றம், இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பருப்பொருள் குறித்த ரகசியங்களை ஆராய்வதற்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,Nancy Grace Roman என்ற அதிநவீன விண்வெளித் தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


நாசா அமைப்பினால் உருவாக்கப்பட்ட இந்த 'ரோமன்' விண்வெளித் தொலைநோக்கி, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து SpaceX நிறுவனத்தின்(Falcon Heavy ஏவுகணை மூலம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  


பிரபஞ்சத்தின் ஆரம்பகால விண்மீன் திரள்கள், கருந்துளைகள் மற்றும் புதிய கோள்களைக் கண்டறிவதுடன், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்குக் காரணமான இருண்ட ஆற்றல் குறித்த பல புதிர்களை விடுவிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.


பிரபல Hubble தொலைநோக்கியை விட 100 மடங்கு அதிகமான பரப்பளவை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்ட கேமராக்கள் இந்த ரோமன் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ளன.  


பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'இரண்டாம் லாக்ராஞ்சியன் புள்ளி' (L2) என்ற சுற்றுப்பாதையை நோக்கிப் பயணிக்கும் இந்தத் தொலைநோக்கி, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபஞ்சத்தின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்து புகைப்படங்கள் மற்றும் தரவுகளை பூமிக்கு அனுப்பவுள்ளது.  


நாசாவின் இந்த புதிய மைல்கல் சாதனை, வானியல் மற்றும் பிரபஞ்ச ஆய்வில் மிகப்பெரிய புதிய தகவல்களை வெளிக்கொண்டு வரும் என விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm