இலங்கையின் அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தப் புதிய ஒருங்கிணைப்புக் குழு!

இலங்கையின் அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தப் புதிய ஒருங்கிணைப்புக் குழு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 'தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு' ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளரின் தலைமையில் இது இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இதில் அங்கம் வகிக்கவுள்ளனர்.
நாட்டின் அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும், சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுமே இந்தக் குழுவை அமைப்பதன் பிரதான நோக்கமாகும்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




