சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்கக் கடற்பகுதியை ஒட்டி குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடையக்கூடும் என்றும் கணித்துள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வங்கக் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, அவ்வப்போது காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழில் மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm