சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

திபெத்தில் உருவான புதிய ஏரி: மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

ஆகாஷ்•31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
திபெத்தில் உருவான புதிய ஏரி: மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

திபெத்தில் உருவான புதிய ஏரி: மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்கனவே உருவான தடுப்பு ஏரிக்கு கீழ் பகுதியில் புதிய செயற்கை ஏரி ஒன்று உருவாகியுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்கனவே உருவான தடுப்பு ஏரிக்கு கீழ் பகுதியில் புதிய செயற்கை ஏரி ஒன்று உருவாகியுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

திடீர் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட இடிபாடுகள் ஆற்று நீரை மறித்ததால் ஏற்கனவே ஒரு தடுப்பு ஏரி உருவாகியிருந்தது. அது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க இயற்கையான முறையில் நீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் மீண்டும் ஒரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

சீன மத்திய தொலைக்காட்சி தகவலின்படி, கண்காணிப்பு ட்ரோன் மூலம் சனிக்கிழமை ஆய்வு செய்தபோதே இந்த புதிய மண்சரிவு கண்டறியப்பட்டது.

 

புருக்பு சியாங் சாங்பு ஆற்றில் ஏற்கனவே இருந்த தடுப்பு ஏரியிலிருந்து சுமார் 2.8 கிலோமீற்றர் (1.7 மைல்) கீழ்நோக்கிய பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகளும் இடிபாடுகளும் நீரை மறித்துப் புதிய ஏரியை உருவாக்கியுள்ளன.

மண்சரிவைத் தொடர்ந்து சீனாவின் அவசரகால முகாமைத்துவ அமைச்சு உடனடியாகப் பகுதிக்கு நிபுணர்களை அனுப்பி நிலைமையை மதிப்பீடு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm