சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

திருமண உதவித் திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்கப் புதிய நடவடிக்கை: ஆதார் எண் கட்டாயமாக்கம்!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
திருமண உதவித் திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்கப் புதிய நடவடிக்கை: ஆதார் எண் கட்டாயமாக்கம்!

திருமண உதவித் திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்கப் புதிய நடவடிக்கை: ஆதார் எண் கட்டாயமாக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்குப் பொருளாதார உதவி வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இத்திவ்பின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்குத் திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.  

அரசு நலத்திட்டப் பலன்கள் இடைத்தரகர்களின் தலையீடின்றித் தகுதியான பயனாளிகளை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், நிதி நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், விண்ணப்பிப்பதற்கு முன்பாகப் புதிய ஆதாரிற்குப் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், ஆதார் எண் கிடைக்கும் வரை பதிவுச் சீட்டுடன் மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி இடைக்காலப் பலன்களைப் பெறலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm