
இலங்கையில் பொது நிகழ்வுகளுக்கு புதிய இசை உரிம விதிமுறைகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்தின் (NIPO) கீழ் இயங்கும் 'இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்' (ACPOSL) வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி, பொது நிகழ்ச்சிகளில் இசை பயன்பாட்டிற்கான புதிய உரிம விதிமுறைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, ஹோட்டல்கள், மண்டபங்கள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட சில இசை வகைகளைப் பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் தன்மை (Live Music / DJ) மற்றும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த உரிமக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 20,000 முதல் அதிகபட்சமாக ரூ. 1,25,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ACPOSL அமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இலங்கை இசைப் படைப்புகளுக்கும் (சிங்களம் உட்பட), 'இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட்ஸ் சொசைட்டி' (IPRS) மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தமிழ் மற்றும் ஹிந்தி இசைப் படைப்புகளுக்கும் மட்டுமே இந்த உரிமம் கட்டாயமாகும்.
ஆங்கிலம் அல்லது பிற வெளிநாட்டு இசையை மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு இந்த உரிமத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைப் படைப்பாளிகள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு உரிய ராயல்டி தொகையை முறையாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




