வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 300 ஆசிரிய மாணவர்களுக்கான 'அமைதி கல்வித் திட்டம்' கோலாகல ஆரம்பம்!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 300 ஆசிரிய மாணவர்களுக்கான 'அமைதி கல்வித் திட்டம்' கோலாகல ஆரம்பம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 300 ஆசிரிய மாணவர்களுக்கான அமைதி கல்வித் திட்டம் (Peace Education Program) சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (17.10.2026) சனிக்கிழமை காலை 8:45 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலாவது தொனிப்பொருளான 'அமைதி' என்ற தலைப்பிலான பயிலரங்கு வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.
கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரட்ணம் கமலகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி மற்றும் தர மேம்பாட்டுப் பிரிவின் உப பீடாதிபதி திருமதி. லிங்கேஸ்வரி துணைவன், கல்வி மற்றும் தர மேம்பாட்டு இணைப்பாளர் விரிவுரையாளர் திருமதி. அரவிந்தன் ஆகியோருடன் விரிவுரையாளர்களான திருமதி. தயாநிதி ஜெயசீலன், திருமதி. சத்தியேந்திரன், திரு. மோகன்ராஜ் மற்றும் திரு. செல்வக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், அமைதி கல்வித் திட்டத்தின் இணைப்பாளர்களான செல்வி. குகானந்தராஜா கீர்த்திகா, திரு. விமலநாதசர்மா மற்றும் திருமதி. பத்மாவதி பத்மநாதன் ஆகியோரின் பங்களிப்புடன் முதலாவது அமர்வு சிறப்பாக இடம்பெற்றது.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக பாராட்டுதல், உள்வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துணர்வு, தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் நிறைவு ஆகிய 9 முக்கிய தலைப்புகளில் அடுத்து வரும் வாரங்களில் சிறப்புப் பயிலரங்குகள் நடைபெறவுள்ளன. பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஆசிரிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




