
தோட்டத் தொழிலாளர் சம்பளம்: புதிய நிர்ணய சபை அமைக்க முடிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, அரசாங்கத்தின் நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் இன்று (16) உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த சம்பள நிர்ணய சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் புதிய சம்பள நிர்ணய சபையொன்றை நியமிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுகமான தீர்வை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




