
இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிகளில் மாற்றம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் புதிய சிம் கார்டுகளைப் பெறுவதற்கான பதிவு நடைமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளன. இதன்படி, புதிய சிம் பெறுவோர் நேரடி புகைப்படம் வழங்கி அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஒரே தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தில் 5 சிம் கார்டுகள் வரை பெற முடியும். மூன்று நிறுவனங்கள் மூலம் 15 சிம் கார்டுகள் வரை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைபேசி எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் Number Portability சேவையை அறிமுகப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அக்கினி
ஆசிரியர் குழுஅக்கினி செய்திகள் ஆசிரியர் குழு
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




