
காவந்திஸ்ஸ யானையின் இறப்புக்கு ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சியம்பலங்கமுவ பகுதியில் 'காவந்திஸ்ஸ' தந்தயானை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையிலான இந்தக் குழுவில் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சூழலியல் வல்லுநர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
யானையின் மரணத்திற்கான காரணங்கள், மருத்துவ சிகிச்சைகளில் ஏதேனும் கவனக்குறைவுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதுடன், காட்டு யானைகளின் நலனுக்கான உரிய செயற்பாட்டு கட்டமைப்பையும் இக்குழு உருவாக்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அடுத்த 30 நாட்களுக்குள் இதற்கான முழுமையான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




