சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

சென்னை வரும் பிரதமர் மோடி! அக்டோபர் 11-இல் பிரம்மாண்டமாக திறக்கப்படும் 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்!

VIGNESWARAN ABIRAMY•4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சென்னை வரும் பிரதமர் மோடி! அக்டோபர் 11-இல் பிரம்மாண்டமாக திறக்கப்படும் 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்!

சென்னை வரும் பிரதமர் மோடி! அக்டோபர் 11-இல் பிரம்மாண்டமாக திறக்கப்படும் 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்திய இசையுலகின் சக்கரவர்த்தியான 'இசைஞானி' இளையராஜாவின் பெயரில் சென்னை ஐஐடி வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' வரும் அக்டோபர் 11-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பூந்தமல்லி - வடபழனி இடையிலான வழித்தடத் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வருகிறார்.

இந்தச் சிறப்புப் பயணத்தின்போது, சென்னை ஐஐடி வளாகத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த பின், ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

சென்னை ஐஐடி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதற்கான அடிக்கல்லை கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின.

சுமார் இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டுத் தயார்நிலைக்கு வந்துள்ள இந்த மையம், அறிவியல் தொழில் நுட்பத்தையும் இசையையும் இணைக்கும் ஒரு சர்வதேச மையமாகச் செயல்படும்.

 "இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் எதிர்காலத்தில் 200 புதிய இளையராஜாக்கள் உருவாக்கப்படுவார்கள்" என்று இசைஞானி இளையராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மையத்தின் முக்கிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

இசை கற்றல், ஒலிப்பதிவுத் தொழில்நுட்பங்கள், இசையியல் ஆய்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இசையை மேம்படுத்துதல் போன்ற அதிநவீன ஆய்வுகளுக்கான முதன்மைத் தளமாக இந்த மையம் திகழும் எனச் சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இசையுலகின் வரலாற்று மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பையும் கலை உலகினரிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm