
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது குவால்காம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm) இந்தியாவில் தனது பணிநீக்கப் படகங்களைத் தொடங்கியுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட முக்கிய வளாகங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வேலை இழக்கும் ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை இழப்பீடாக மூன்று மாத சம்பளம் வழங்கப்படுவதோடு, அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் மேலதிக மாதச் சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிவாரணக் கடிதங்களில் குறுகிய காலக்கெடுவிற்குள் (3 நாட்களுக்குள்) கையெழுத்திடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாகக் கூடுதலாக ஒரு மாதச் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




